வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (13:57 IST)

லெட்சுமி ஹோட்டல்களில் 3 வது நாளாக ரெய்டு! – சிக்கியதா முக்கிய ஆவணங்கள்!

சேலத்தில் பிரபலமான லெட்சுமி ஹோட்டல்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

சேலம் பகுதியில் பிரபல தங்குமிடம் மற்றும் உணவகங்களை நடத்தி வரும் லெட்சுமி குழுமத்திற்கு தமிழகமெங்கும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வருமான வரி அதிகாரிகள் சேலம் லெட்சுமி ஹோட்டல் மற்றும் அதன் உரிமையாளரின் வீடு ஆகிய 5 இடங்களில் வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சோதனையில் மூன்றாவது நாளான இன்று லட்சுமி ஓட்டலின் தஞ்சாவூர், திருச்சி, கோவை கிளைகளிலும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சோதனை சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.