வெள்ளி, 14 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 16 நவம்பர் 2016 (20:45 IST)

ரஜினிகாந்த் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும் - அப்துல் ரஹீம் கோரிக்கை

ரஜினிகாந்த் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும் - அப்துல் ரஹீம் கோரிக்கை

சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி அலுவலகத்தில் அவர் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கியில் உள்ள மேனேஜர்கள் குறிப்பிட்ட சதவீதத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு, பணக்காரர்களுக்கு புதிய பணத்தை மாற்றித் தருகின்றனர். 
 
அவை அனைத்தும் கருப்புப் பணம்தான். எனவே,  நகைக்கடை அதிபர்கள், தொழிலதிபர்கள், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் வீட்டில் அதிரடி சோதனை செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.