விஜய் பட தயாரிப்பாளரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை !

archana kalpathi
sinoj kiyan| Last Updated: புதன், 12 பிப்ரவரி 2020 (18:45 IST)

கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில்,
விஜய் நடித்த பிகில் படம் நல்ல வசூல் சாதனை செய்யப்பட்டதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனையடுத்து சமீபத்தில் நடிகர் விஜய்யின் வீடு , அப்படத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதவீடு அலுவலகம், பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


இதில், சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வளியானது. அதேசமயம் அன்பு செழியன் அலுவலகத்தில் இருந்து
ரு. 70 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செயப்பட்டது.


இந்நிலையில் நேற்று அன்புச் செழியன் மற்றும் விஜயின் ஆடிட்டர்க்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவகங்களில் ஆஜராகினர்.

இன்று, பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வரிமான வரித்துறையினர்
பல கேள்விகளை கேட்டு விசாரித்து வருதாக தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :