செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (16:14 IST)

விஜய் மீது தனிப்பட்ட பகை கிடையாது - பொன்.ராதாகிருஷ்ணன் !

Vijay has no personal enmity Pon Radhakrishnan

நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அவர் வீட்டில் ஆவணங்கள் மற்றும் பணத்தை கைப்பற்றவில்லை ; ஆயினும் பிரபல பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் ரூ. 70 கோடிக்கு மேல் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். முப்பது மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அடுத்த நாள் விஜய்’ மாஸ்டர் ’படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
 
அப்போது பாஜவினர் என்.எல்.சியில்  படப்பிடிப்பு நடத்தக் கூடாது என போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்பின், நடிகர், விஜய்வாகனத்தில் மேல் நின்று, ரசிகர்களுடன்  செல்ஃபி எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அது வைரல் ஆகி வருகிறது.  இந்நிலையில், விஜய் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை என பொன்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது :
 
டெல்லியில், பாஜக இதுவரை பெறாத அதிக வாக்குகளையும்,  தொகுதிகளையும் பெற்றுள்ளது என்றார்.
 
மேலும், நடிகர் விஜய்க்கும் தங்களுக்கும் எந்த பகையும் கிடையாது. நெய்வேலி என்.எல்.சியில் செல்வதற்கு விதிமுறைகள் உள்ளது. அங்கு செல்வதற்கு பிரதமர் முதல் தொழிலாளர் வரை விதிமுறைக்கு உட்பட்டுத்தான் செல்ல முடியும்.
 
விஜய் பட ஷூட்டிங் மட்டும் நடத்தக் கூடாது என போராட்டம் நடத்தவில்லை; யார் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என அங்கிருந்த பாஜக சகோதரர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.