1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஜூலை 2018 (19:51 IST)

ஆப்ரேஷன் பார்க்கிங் மனி: ரெய்டுக்கான பெயர் பின்னணியில் என்ன?

கடந்த இரண்டு நாட்களாக அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.  இந்த சோதனை குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகிறது.
 
அருப்புக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். எஸ்பிகே கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகிறார்கள். 
 
இந்த நிறுவனம் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் சாலை முதற்கொண்டு பல கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதில் ஊழல் நடந்திருப்பதாக வந்த தகவலின் பேரில் ரெய்ட் நடத்தப்படுகிறது. 
 
செய்யாதுரை வீட்டில் சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் ஆப்ரேஷன் பார்கிங் மனி கோட் வேர்ட் ஒன்று பயன்படுத்தி இருக்கின்றனர். அதாவது, எஸ்பிகே குழுவில் கணக்கில் வராத பணம் எல்லாம் காரில் பதுக்கி வைக்கபட்டு இருக்கிறது என தகவ கிடைத்துள்ளது. 
 
அதனால், இந்த ரெய்டுக்கு பார்கிங் மனி என்று பெயர் வைக்கப்பட்டு  செய்யாதுரை வீடுகளில் பார்க் செய்யபட்ட கார்கள், பக்கத்துவீட்டில் இருக்கும் கார் என சோதனை செய்யப்பட்டது. தகவலின்படி கார்களில் இருந்து மட்டும் ரூ.80 கோடி பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.