திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 22 ஜூலை 2023 (21:30 IST)

கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி...

karur
புன்னம் சத்திரம் அருகே உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலுவலக  பணியாளர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது...  
 
விழாவினை கல்லூரி தலைவர் திருமதி ராஜேஸ்வரி கதிர்வேல் அவர்கள் தொடங்கி வைத்தார்... கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் அவர்கள் முன்னிலை வகித்தார்... கல்லூரியின் முதல்வர் முனைவர் மு மனோ சாமுவேல் ஐயா அவர்கள் தலைமை வகித்தார்... இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை மாணவிகள் மற்றும் துறைத் தலைவர்கள் , பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்... 
 
இந்நிகழ்வில் அனைத்து துறை  முதலாமாண்டு  இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் என‌ தேர்தலில் வெற்றி பெற்ற 50 மாணவிகளுக்கு  கல்லூரி  முதல்வர் அவர்கள் துறைவாரியாக பினை   வழங்கி பதவிபிரமானம் செய்து வைத்து பாராட்டினார்...