இருமொழிக் கொள்கையே ஏமாற்று வேலை; ஒரு மொழி போதும்! – கருணாஸ் காட்டம்!
மத்திய அரசின் மும்மொழி கொள்கையை தமிழக அரசு எதிர்த்துள்ள நிலையில், இருமொழி கொள்கையே தேவையில்லை என எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என தமிழகத்தில் உள்ள கட்சியினர் பலர் கூறி வந்த நிலையில் இன்று ஆலோசனைக்கு பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் எப்போது இருமொழி கொள்கையே தொடரும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமியின் இந்த முடிவிற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏவும், நடிகருமான கருணாஸ் “மும்மொழி கொள்கை மோசடி என்றால், இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலையாகும். ஒரு மொழி கொள்கை என்பதே நமது உரிமை கொள்கை என்பதில் எதிர்காலத்தில் நிலைநிறுத்த வேண்டும். தாய்மொழி தமிழை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.