செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (10:31 IST)

மும்மொழி கொள்கையை அனுமதிக்க மாட்டோம்! – எடப்பாடியார் அதிரடி!

மும்மொழி கொள்கையை அனுமதிக்க மாட்டோம்! – எடப்பாடியார் அதிரடி!
மத்திய அரசின் புதிய கல்வி திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் “மத்திய அரசு மும்மொழி கொள்கையை புதிய கல்வி திட்டத்தின் மூலம் கொண்டு வருவது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் “மாநில அரசுகளில் கல்வி கொள்கையின் அடிப்படையில் புதிய கல்வி திட்டங்களை நடைமுறைப்படுத்தி கொள்ள மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து மக்கள்ன் கோரிக்கைகளை ஏற்று புதிய கல்வி கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.