செவ்வாய், 1 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2024 (17:40 IST)

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு 111% அதிகளவில் பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

monsoon
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்யும் என்றும், சுமார் 111% அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு அதிக அளவு மழைப்பொழிவு இருக்கும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனமழை பெய்தால், தமிழகம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்; இருப்பினும், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து நம்பிக்கை உள்ளது.

Edited by Siva