வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (15:54 IST)

ரெட் லைட் ஏரியாவாக மாறி வரும் மதுரை ஆவின்; வழக்கறிஞர் பகீர்!!!

மதுரை ஆவின் ரெட் லைட் ஏரியாவாக மாறி வருகிறது எனவும் அது சம்மந்தமாக தன்னிடம் 127 வீடியோக்கள் ஆதாரமாக உள்ளதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் நிர்மலா தேவி சிறையில் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்ததாக கூறினார்.
 
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மதுரை ஆவினில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் என பலர், அங்கு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக என்னிடம் 127 வீடியோக்கள் ஆதாரமாக உள்ளது என கூறினார். விரைவில் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் கூறினார்.