வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:23 IST)

எப்ரல் 18 - ல் மதுரையில் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு - தேர்தல் அதிகாரி

மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 வரை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு தொடர்பாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், மதுரையில்  சித்திர விழாவை ஒட்டி தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
மதுரை தவிர மற்ற இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை  1 மணிநேரம் நீட்டிப்பு செய்துள்ளது  தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் மதுரையில் சித்திரை திருவிழாவை ஒட்டி ஏப்ரல் 18 மதுரையில் வாக்குப்பதிவை ஒத்தி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று மதுரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு நேரத்தை  நீட்டித்து  மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 வரை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகார் சத்தியப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.