1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 ஜூன் 2018 (19:20 IST)

ஐந்தாவது நாளே தியேட்டர் காலி! பணத்தை திருப்பி கேட்கும் 'காலா' விநியோகிஸ்தர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி வசூலை அள்ளியதாக ஒரு பக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படம் தோல்வி, பணத்தை திருப்பி கொடுங்கள் என்று ஒருசில விநியோகிஸ்தர்கள் பிரச்சனையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.
 
கடந்த வியாழன் அன்று வெளியான 'காலா' திரைப்படம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களும் ஓரளவு வசூலை தந்தது உண்மைதான். இந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ.43 கோடி வசூல் செய்துள்ளது.
 
இருப்பினும் ஒரு படத்தின் வெற்றி என்பது ரிலீஸ் ஆன முதல் திங்கள் அன்று வரும் கூட்டத்தை பொருத்துதான் அது வெற்றி படமா? அல்லது தோல்வி படமா? என்று முடிவு செய்யப்படும். அதன்படி இன்று பெரும்பாலான திரையரங்குகளில் பாதி இருக்கைகள் கூட நிரம்பவில்லை என்று கூறப்படுகிறது.
 
எனவே ஒருசில விநியோகிஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்டு நச்சரிப்பதாகவும், ரஜினியின் கதை தேர்வு சரியில்லை, படம் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு ஏற்ற மாதிரி இல்லை என்று சேனல்களுக்கு பேட்டியளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே காத்திருந்த சேனல்களும் வரிந்து கட்டிக்கொண்டு இந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.