ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (09:34 IST)

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? - மோகன் ஜி ஆவேசம்!

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில் இதுகுறித்த தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.

 

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு காலம்காலமாக லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

 

அதை தொடர்ந்து லட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் அதில் மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது உறுதியானது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி “எப்படி மனசாட்சி துளிக்கூட இல்லாமல் இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கிறீர்கள். வைணவ முத்திரை வாங்கிய எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள். கொடூஎஅமான தண்டனை வழங்க வேண்டும் இந்த கொடிய செயலை செய்த மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K