செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2018 (20:35 IST)

வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றால் வன்முறைக்கு வாய்ப்பு: அதிர்ச்சி தகவல்!

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து சொன்ன வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜீயர் உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால் அவர் அங்கு சென்றால் வன்முறைக்கு வாய்ப்பு உள்ளதாக நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
 
ஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய விஷயம் தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையை எழுப்பியது. அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்து போராட்டம் நடத்தியது.
 
இதனையடுத்து வைரமுத்து தனது கருத்து தவறாக திரிக்கப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜீயர் சடகோப ராமானுஜம் பிடிவாதமாக தனது இரண்டாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
 
இந்நிலையில் ஜீயரின் செயலை விமர்சித்து நாஞ்சில் சம்பத் பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ஜீயரின் பின்னால் வகுப்புவாத சக்திகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும், ஆண்டாளிடத்தில் அன்னாந்து பார்க்கிற உயரத்தில் இருக்கிற கவிஞர், ஆண்டாள் குறித்து சொன்னதற்கு அவர் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறிவிட்டார். இங்கே வா, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வா என்று அழைக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏதோ வன்முறைக்கு திட்டமிட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.