மோடி பேச்சை கேட்டால் பூஜியம்தான் பரிசாக கிடைக்கும்: தங்க தமிழ்ச்செலவன்

Thanga Tamil Selvan
Last Updated: திங்கள், 19 பிப்ரவரி 2018 (09:52 IST)
பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணணந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தது உண்மை என்று ஓபிஎஸ் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
மோடியின் பேச்சை கேட்க வேண்டாம், அதிமுக பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என்று நாங்கள் ஆரம்பம்
முதலே கூறி வருகிறோம். ஆனால் தற்போது துணை முதல்வரே, 'மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக ஒப்புக்கொண்டு விட்டார்.

மோடி பேச்சை கேட்டு இணைந்ததால்தான் அதிமுகவுக்கு ஆர்.கே.நகரில் தோல்வி கிடைத்தது. இன்னும் மோடி பேச்சை கேட்டுக் கொண்டே இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பூஜ்யம் தான் பரிசாக கிடைக்கும்' என்று தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :