கரும்பு விவசாயி சின்னம் உங்களுக்கு லக்கி இல்லை: சீமானுக்கு நீதிபதி அறிவுரை..!
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காத நிலையில் அந்த சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது கரும்பு விவசாயி சின்னம் உங்களுக்கு லக்கி இல்லை போல் தெரிகிறது, எனவே அதை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த சின்னம் முதலில் கேட்டவருக்கு ஒதுக்கப்படும் என்ற அடிப்படையில் கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கரும்பு விவசாயி சங்கம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கரும்பு விவசாயி சின்னம் எங்களுடையது, எப்படியும் பெற்றுத் தருவோம் என சீமான் நம்பிக்கையுடன் தனது கட்சி தொண்டர்களிடம் கூறிய நிலையில் தற்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran