வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2017 (15:48 IST)

அம்மா போல் நானும் வழிநடத்துவேன்: சசிகலா

புரட்சித் தலைவி அம்மா எப்படி வழி நடத்தினாரோ, அதேபோல் நானும் வழிநடத்துவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார்.


 

 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று தலைமைக் கழகத்தில் நெல்லை மாநகர், புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
 
 
மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா கூறியதாவது:-
 
புரட்சித்தலைவர் பிறந்த நாளை மிக எழுச்சியோடு கொண்டாட வேண்டும். புரட்சித்தலைவி அம்மா புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மாதம் ஒருமுறை தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். 
 
புரட்சித் தலைவி அம்மா எப்படி வழி நடத்தினாரோ, அதேபோல் நானும் வழிநடத்துவேன். உங்கள் உழைப்புக்கு நிச்சயம் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.