செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (15:10 IST)

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

crime
அரியலூரில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை அதன் தாத்தாவே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



என்னதான் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும் கூட மக்கள் பலர் மூடநம்பிக்கையின் காரணமாக மோசமான சில விஷயங்களை செய்வது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. குழந்தை பிறக்கும்போது கூட நல்ல நேரம் பார்த்து அந்த நேரத்தில் பிரசவம் நடக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மோசமான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துகின்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் தாத்தா வீரமுத்து. குழந்தை பிறந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை சித்திரை மாதம் பிறந்ததால் உயிருக்கு ஆபத்து என்றும், கடன் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் யாரோ சொன்னதை நம்பிய வீரமுத்து, 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டு முக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் குழந்தை தண்ணீர் பேரலில் தவறி விழுந்ததாக நாடகம் ஆடியுள்ளார்

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் வீரமுத்துவை கைது செய்துள்ளனர். மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தையை தாத்தாவே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K