செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (15:32 IST)

நான் நினைச்சேன், ஐடி ரெய்டு நடக்கும்ன்னு! நடிகை கஸ்தூரி

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் ஐடி ரெய்டு குறித்து ஏற்கனவே கணிப்பு செய்திருந்ததாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்



 
 
ஜெயா டிவி உள்பட நாடு முழுவதிலும் உள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இன்று காலை முதல் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. சுமார் 1800 ஐடி அதிகாரிகள் கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த ரெய்டு குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியதாவது: 
 
மோடி கலைஞர் வீட்டுக்குள்ள நுழைஞ்சப்பவே நினைச்சேன்...IT ஆபிஸருங்க ஜெயா டிவிக்குள்ள  நுழைவாங்கன்னு ! என்று கூறினார்.
 
மேலும் வெகுவிரைவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்பது எனது கணிப்பு என்று கூறியுள்ளார்.