லியோ படம் பற்றி விமர்சனம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை- ராஜேஸ்வரி பிரியா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், திரிஷா,சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த படம் லியோ. இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படம் பற்றி அவர் தன் சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று கோயம்புத்தூர் அர்ச்சனா திரை அரங்கில் லியோ திரைப்படம் பார்த்தோம். திரைப்படம் குறித்த விமர்சனம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஆனால் இளைஞர்களை சீரழிக்கும் வகையிலான நான் குறிப்பிட்ட பாடல் வரிகள் திரையரங்கில் நீக்கம் செய்யபட்டதனை கண்டதும் மகிழ்ச்சியே. தொலைகாட்சிகளிலும் இதே போன்றே “நான் ரெடியா”பாடல் ஒலிபரப்பபடும் என்று நம்புகிறேன்.இருந்தாலும் திரைப்படம் முழுவதும் புகையே என்பது வேதனைதான்.
சமூக நலன் சார்ந்து குறிப்பாக குழந்தைகள் நலன் மீது அக்கறை கொண்டு நான் எடுத்த முயற்சிக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அவர்கள் வருங்காலத்திலாவது புகை மற்றும் மது காட்சியில் நடிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்