வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (10:52 IST)

கோமாளிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விருப்பமில்லை: டிடிவி தினகரன்

சசிகலாவு பரோலில் வந்த இந்த ஐந்து நாட்களிலும் தினமும் அவருடன் அரசியல் குறித்த ஆலோசனையை செய்து கொண்டிருக்கும் டிடிவி தினகரன்,18 எம்.எல்.ஏ.க் கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் 2-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதும், நவம்பர் 2ஆம் தேதிக்கு பின்னர் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை எடுப்பது குறித்தும் சசிகலாவுடன் தினகரன் விவாதித்து வருவதாக தெரிகிறது.



 
 
இந்த நிலையில் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தினகரன் கூறியதாவது:தற்போது நடைபெறும் துரோக ஆட்சியில் மக்களுக்கான சாதகமான முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுமா? என்று எல்லோரும் எதிர்பார்ப்பது போல் நானும் எதிர்பார்க்கிறேன். இப்போது கூட்டப்படும் அமைச்சரவை கூட்டத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.
 
முதல்வர் பழனிசாமியும் அமைச்சர்களும் என்னைப் பற்றி பல்வேறு யூகத்துடன் பேசுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். தமிழ்நாட்டில் சிலர் கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி நான் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
 
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இந்த அரசு நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது. கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது எது உண்மையான ஆட்சி என்று மக்களுக்கு தெரியவரும். இவ்வாறு கூறினார்.