புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (12:54 IST)

என்ன இப்படி ஆகிவிட்டது–மூட் அவுட்டில் ஸ்டாலின்

சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பால் திமுக தலைவர் ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

திமுக வின் செயல்தலைவராக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களில் ஒன்று. அவர் கருணாநிதி போல அரசியல் சாணக்யத்தனத்துடன் செயல்படவில்லை என்பது. வலிமை இல்லாத இந்த எடப்பாடியின் ஆட்சியைக் கூட அவரால் கலைக்க முடியவில்லை. பழனிச்சாமியின் ஆட்சியைக் கலைக்க டிடிவி தினகரன் எடுத்த அளவிலான முயற்சிகளை ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை எனப் பலவாறு கூறப்பட்டு வந்தது. திமுக தலைவர் கருணாநிதி இப்போது நல்ல உடல்நிலையோடு செயல்பட்டுக் கொண்டிருந்தால் இந்த சூழ்நிலைகளை சிறப்பாகக் கையாண்டு ஆட்சியைக் கலைத்திருப்பார் என பொதுமக்கள் கூட எண்ணத் தொடங்கினர்.

இந்நிலையில் நேற்று வெளிவர இருந்த தீர்ப்புக்காக காத்திருந்த ஸ்டாலின், கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி வழக்கறிஞர்களை சந்தித்து தீர்ப்பு எவ்வாறு வரும் என கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார் அவர்கள் அனைவரும் வழக்கு எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாகவே வரும் எனக் கூறியதை நம்பி தீர்ப்ப்புக்குப் பின் செய்ய வேண்டிய வேலைகள் குறித்தும் அவர்களுடன் விவாதித்துள்ளார். அதில் ‘தீர்ப்பு வந்ததும் சட்டமன்றத்தில் எடப்பாடிப் பழனிசாமிக்கெதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனவும் முடிவு செய்திருந்தார். அந்த 18 எம்.எல்.ஏக்கள் எப்படியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள் அதனால் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாது. அதனால் ஆட்சி கலைந்து தேர்தல் வரும் சூழ்நிலை வரும்’ என மிக மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

ஆனால் தீர்ப்பு பாதகமாக வரவே நிர்வாகிகளிடம் ’என்ன இப்படி ஆகிவிட்டது’ என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதனால் இடைத்தேர்தல் வந்தால் அதில் சிறப்பாக செயல்பட்டு அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று தங்கள் பலத்தைக் காட்டவேண்டும் எனவும் அந்தந்த தொகுதிகளில் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.