திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (13:21 IST)

விஸ்வாசம் போஸ்டரில் எடப்பாடி பழனிச்சாமி – நெட்டிசன்கள் குறும்பு

இன்று காலை 10.30 மணியளவில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வெளியானது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வெளியான அதே நேரத்தில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

அந்த போஸ்டர் ஒரு திருவிழாப் பின்னணியில் அஜீத் தனது புல்லட்டில் மகிழ்ச்சியாக வருவது போலவும் அவருக்குப் பின்னால் மக்கள் சந்தோஷமாக ஆடிப்பாடுவது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. போஸ்டர் வெளியான உடனேயே அஜித் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

போஸ்டர் வேகமாகப் பரவிவரும் நேரத்தில் நெட்டிசன்கள் சிலர் அந்த போஸ்டரில் அஜித்தின் முகத்திற்குப் பதிலாக முதல்வர் பழனிச்சாமியின் முகத்தையும் பின்னால் ஆடும் மக்களின் முகத்துக்கு பதில் அதிமுக அமைச்சர்களின் முகங்களையும் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

அதிமுக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் அவர்கள் அனைவரும் அந்த தீர்ப்பை ஆடிப்பாடிக் கொண்டாடுவது போல இந்த போஸ்டர் அமைந்துள்ளதால், இந்த போஸ்டரும் வைரலாகப் பரவி வருகிறது.