செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (16:43 IST)

நான் நலமாக இருக்கின்றேன்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் ராம்தாஸ் தகவல்

ramdoss
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நான் நலமாக இருக்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது
 
கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர்  அன்பின் மிகுதியால் என்னிடம் நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் பேச முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது!
 
நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது.  அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன். எனவே, பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட  அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!