திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (08:57 IST)

தனிமையை வீடியோ எடுத்த கணவன் – அதிர்ச்சியடைந்த மனைவி !

தனது மனைவியுடனான அந்தரங்கத்தை செல்போனில் கணவன் வீடியோ எடுத்ததை அடுத்து அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் மனைவி.

திருக்கோவிலூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இஞ்சினியருக்கும் பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கும் பெரியோர்களால் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பெண் வீட்டார் சார்பில் 50 லட்ச ரூபாய் வரதட்சனையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கார்த்திக்கு சென்னையில் வேலை கிடைக்க அங்கு குடியேற மேலும் 2 லட்சம் வற்புறுத்தி கேட்டு வாங்கியுள்ளனர் கார்த்தி குடும்பத்தினர். சென்னைக்கு சென்ற பின் பாலியல் வீடியோக்களை மனைவிக்கு காட்டி அதைப்போல தன்னிடம் நடந்துகொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார். பின்னர் மனைவிக்கு தெரியாமல் அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இதை பார்த்துவிட்ட மனைவி அதிர்ச்சியடைந்து தன் பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

அவர்கள் மனமகனிடம் பெற்றோரிடம் இது சம்மந்தமாக சொல்ல அவர்கள் மகனைக் கண்டிக்காமல் மேலும் வரதட்சணை வேண்டும் எனக் கேட்க அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தாரைக் கைது செய்துள்ளனர்.