போலீஸ்காரன் மனைவியுடன் ஜல்சா: தகாத உறவால் வந்த விபரீத வினை

Last Updated: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (14:25 IST)
வேறு ஒரு நபருடன் இருந்த தகாத உறவு கைவிடும்படி கூறியும் கேட்காததால், மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக போலீஸ்காரர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை செம்பியம் கவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்நாதன். இவர் கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி அர்ச்சானாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். 
 
இதன் பின்னர் அவரிடம் மேற்கொண்ட விராசணையில் பிரேம்நாதன் பின்வருமாறு தெரிவித்தார், என் மனைவி அர்ச்சனாவுக்கு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இது எனக்கு தெரியவந்தது நான் என் மனைவியை கண்டித்தேன். ஆனால், அவல் என் பேச்சை கேட்கவில்லை. 
 
மேலும், உறவினர்கலிடம் இருந்து ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி அந்த வாலிபருக்கு செலவு செய்துள்ளார். இதெல்லாம் தெரிந்ததும் மனைவியை மீண்டும் கண்டித்தேன். ஆனால் நான் சொல்வதை கேட்காமல் வாக்குவாதம் முற்றி கோபத்தில் இரும்பி கம்பியால் அடித்து கொன்றேன் என அவர் தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :