மனைவி பாஜகவில், சகோதரி காங்கிரஸில்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு தர்மசங்கடம்

Last Modified திங்கள், 15 ஏப்ரல் 2019 (07:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா கடந்த மாதம் 3ஆம் தேதி பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜடேஜாவின் சகோதரி் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் ஜடேஜாவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். நைனா ஜடேஜா காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹர்திக் பட்டேல் உடன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

காங்கிரஸ் கட்சியில் இணைந்தவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நைனா ஜடேஜா, 'எனது தந்தை காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை. எனினும் அவர் எனக்கு தார்மீக ஆதரவு அளிப்பார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன்' என்று கூறியுள்ளார்.

முன்னாள் மருத்துவ உதவியாளரான நாயினாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :