வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (17:12 IST)

மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை

மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா(22).  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோகண்டி என்ற பகுதியில் மனைவி பூஜாவுடன் தங்கி ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

 நேற்று முன் தினம் கிருஷ்ணா நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார்.

இதை மனைவி பூஜா கண்டித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் தம்பதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், மனைவி கடைக்குச் சென்றபோது, விசிறியின் கொகியில் தூக்கிட்டு கிருஷ்ணா தற்கொலை செய்துகொண்டார். கடைக்குச் சென்று திரும்பி வந்த பூஜா, கணவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.