திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (13:01 IST)

சின்ன கோபத்தில் மனைவி தற்கொலை.. அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை.. திருமணமான 3 மாதத்தில் பரிதாபம்..!

வெளியே அழைத்துச் செல்லவில்லை என்ற கோபத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதாகவும் மனைவி மரணம் அடைந்த செய்தி கேட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளியாகிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூவரசன் என்ற 26 வயது இளைஞருக்கும் ஐஸ்வர்யா என்ற 25 வயது பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் தனது நெருங்கிய உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு ஐஸ்வர்யா தனது கணவரிடம் கேட்டு இருக்கிறார் 
 
ஆனால் பூவரசன் இப்போது முடியாது இன்னொரு நாள் பார்ப்போம் என்று கூறி வெளியே சென்று உள்ளார். ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வெளியே அழைத்துச் செல்லவில்லை என்ற கோபத்தில் ஐஸ்வர்யா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
 இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் பூவரசன் கழிவறையில் உள்ள திராவகத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரு சின்ன பிரச்சனை காரணமாக திருமணம் ஆன மூன்றே மாதத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran