1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (20:51 IST)

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..! கணவன் இறந்த தூக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி..!!

Family Sucide
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 36. விவசாயி. இவர் முசிறி துறையூர் சாலையில் நாலாவது மைல் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார்.
 
மூன்று மாதத்திற்கு முன்பு இவரது ஒன்பது மாத ஆண் குழந்தை சளி காரணமாக இறந்து போனது. மகன் அடுத்து கணவன் இறந்த விரக்தியில் இருந்த சிலம்பரசனின் மனைவி கலா
(வயது 26),  அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 
 
தகவல் அறிந்து வந்த முசிறி போலீசார் கலாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


கணவன் இறந்த தூக்கத்தில் மனைவியும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த கிராமத்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.