வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (10:47 IST)

மீண்டும் மெகா கூட்டணி... கன்ஃபர்மேஷன் கொடுத்த ஜெயகுமார்!

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக, பாமக அடங்கிய மெகா கூட்டணி அமையும் என ஜெயகுமார் கருத்து. 
 
ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. ஆம், இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் அதிமுக கூட்டணி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக, பாமக அடங்கிய மெகா கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பயத்தால் வீட்டிற்குள்ளேயே இருந்த கமல், வாக்குகளுக்காக மக்களை சந்திக்க செல்கிறார் எனவும் கமலை விமர்சித்துள்ளார்.