திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:01 IST)

கமல்ஹாசனின் கட்சி கொடியை படுமோசமாக கிண்டலடித்த எச்.ராஜா

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியிருக்கும் புதிய கட்சியின் கொடியை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் எச்.ராஜா கிண்டலடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று முந்தினம் ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.  
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் கமலின் கட்சிக் கொடி காப்பியடிக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துவந்த நிலையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜாவும் தனது பங்குக்கு ட்விட்டரில் கமலின் கட்சிக் கொடியை கலாய்த்துள்ளார். கமல் கட்சிக் கொடி குறித்து, "ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் லோகோவை anti clockwise ல் போட்டால் மநீம" என எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார். இதற்கு கமல் ரசிகர்கள் பலரும் தங்களது கண்டணங்களை  பதிவிட்டு வருகின்றனர்.