திருடுபோன ஸ்மார்ட் போன்களை கண்டறிவது எப்படி ?
இன்றைய உலகில் செல்போன் இல்லாதவர்களைப் பார்ப்பது அரிது தான்! அந்த வகையில் எல்லோரும் செல்போன் மற்றும் இண்டெர்நெட்டில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் நமது ஸ்மார்ட் போனைத் தொலைந்துவிட்டாலோ அல்லது யாராவது திருடிவிட்டாலோ அதை கண்டுபிடிக்க மத்திய அரசு ஒரு டிராக்கர் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதில், காணால் போனது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, செண்ட்ரல் எக்கியூப்மெண்ட் ஐடெண்டிட்டி ரிஜிஸ்டர் என்ற தளத்தில் பதிவு செய்து நமது மொபைல் எங்கு உள்ளது என்பதை டிராக் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இந்த வசதியை முதன் முதலில் டெல்லி மற்றும் மஹாராஷ்டிராவில் அறிமுகம் செய்துள்ளது.
இதில்,https://ceir.gov.in/home/index.jsp என்ற இணையதள முகவரியில் சென்று, காவல்துறையின் புகார் , செல்பேசியின் ஐ.எம்.இ.ஐ எண், உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியும். அந்த செல்போனை யாரும் பயன்படுத்தமுடியாதபடி பிளாக் செய்யவு முடிவும் என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.