1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:25 IST)

கனமழையால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா? : மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழை முதல் கனமழை வரை வயது வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. 
 
இந்த நிலையில்  சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். 
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
எனவே இன்று மழை பெய்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva