1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (14:41 IST)

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? உடனே என்ன செய்ய வேண்டும்?

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில்  இந்த பட்டியலில்  நம்முடைய பெயர் இல்லை என்றால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். 
 
வாக்காளர் பட்டியலில் நம் பெயர் இல்லை என்றால் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6ஐ சமர்ப்பித்து விண்ணப்பம் செய்ய வேண்டும். இணையதளம் மூலமாக என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். 
 
மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து  Voter Helpline App என்ற செயலியை தரவிறக்கம் செய்து அதன் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம். 
 
மேலும் www.voters.eci.gov.in என்ற இணையதளம் சென்றும் நம்முடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
 
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி செய்தவர்கள் தகுதி உள்ள வாக்காளர்களாக கருதப்படுவார்கள். இதனை அடுத்து இன்று வெளியாகியுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் உடனடியாக மேற்கண்ட முறையில் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva