1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:40 IST)

இறந்ததாக நினைத்து மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர். திடீரென எழுந்ததால் பரபரப்பு..!

இறந்ததாக நினைத்து மயானத்திற்கு இளைஞர் ஒருவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் திடீரென அவர் எழுந்தது மணப்பாறை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  

மணப்பாறை அருகே மருங்காபுரி என்ற பகுதியைச் சேர்ந்த ஆண்டி நாயக்கர் என்பவர் திடீரென தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைக்கு பணம் இல்லை என்பதால் அரசு மருத்துவமனையில் மாற்ற அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்  

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது திடீரென பேச்சு மூச்சென்று இருந்தார். இதனால் உறவினர்கள் அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.

அப்போது திடீரென ஆண்டி நாயக்கர் மூச்சுவிடும் சத்தம் கேட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து குடும்பத்தினர் மகிழ்ச்சியாக அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Mahendran