கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா
தற்போது உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5வது நாடாக இந்தியா உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து, 15 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 40,625 பேர் கொரோனாவால் உயிரித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,975 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம். மும்பையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,774 ஆக உள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 2,969 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5வது நாடாக இந்தியா உள்ளது.