திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (15:23 IST)

எனக்கு வாழ்த்து சொல்வதை விட மக்களுக்கு உதவுங்கள்! – பாஜக அண்ணாமலை கோரிக்கை!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக தமிழக துணை தலைவருமான அண்ணாமலை தனது ஆதரவாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்த பின் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழக துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று அண்ணாமலை பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவருக்கு டிபி வைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள அண்ணாமலை இந்த இக்கட்டான கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.