திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 6 ஜூன் 2021 (09:14 IST)

பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி தர முதல்வர் ரங்கசாமி மறுப்பு ?

பாஜகவிற்கு துணை முதல்வர் பதவியை அளிக்க முதல்வர் ரங்கசாமி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
புதுச்சேரியில் முதலமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றார். எனினும் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கட்சிகளிடையே அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியை பங்கிடுவதில் கடும் இழுபறி நிலவி வந்தது. 
 
இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் பாஜக அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக தரப்பில் அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் மற்றும் சபாநாயகராக செல்வம் ஆகியோர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனோடு துணை முதல்வர் பதவியை பாஜக கோரியதகாவும், ஆனால் துணை முதல்வர் பதவியை அளிக்க ரங்கசாமி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் அரசியல் பரபரப்பி சூழ்நிலை உருவாகியுள்ளது.