தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான்..! – தமிழக அரசு உறுதி!
தமிழகத்தில் கல்வி திட்டங்களில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மும்மொழி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து இருமொழி கொள்கையே அமலில் இருக்கும் என தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றம் “கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அதுபோல தமிழகத்தில் கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று கேள்வியெழுப்பியுள்ளது.
இதற்கு திட்டவட்டமாக பதிலளித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இருமொழி கொள்கையே தொடரும் என தெரிவித்துள்ளது.