வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (11:46 IST)

முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி முக்கிய ஆலோசனை!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்
 
இந்த சந்திப்பின்போது கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது