கஸ்தூரிக்கு ஜாமீன் கொடுங்கள்: சென்னை ஐகோர்ட் நீதிபதி மனைவி வேண்டுகோள்.!
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் மனைவி காமாட்சி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் நடந்த இந்து மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த அவரை ஹைதராபாத்தில் வைத்து சென்னை போலீசார் கைது செய்து, பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கஸ்தூரியின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கஸ்தூரியின் ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் மனைவி காமாட்சி கூறியுள்ளார்.
கஸ்தூரிக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உள்ளதையும், அந்த சிறப்பு குழந்தையை தனியாக கஸ்தூரி போராடி வளர்த்து வருகிறார் என்றும், குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran