1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 நவம்பர் 2024 (15:52 IST)

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

நடிகை கஸ்தூரி சற்றுமுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நடந்த இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானதாகவும் இதையடுத்து அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், ஐதராபாத்தில் நேற்று நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அதன் பின் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதையடுத்து நீதிபதி நவம்பர் 29ஆம் தேதி வரை நடிகை கஸ்தூரியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva