செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (11:03 IST)

சென்னையில் பேரதிர்ச்சி: பெண்கள் விடுதி குளியலறைகளில் ரகசிய கேமரா

சென்னையில் பெண்கள் விடுதி குளிலயறைகளில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சென்னையை நோக்கி வருகின்றனர். அப்படி வரும் பெண்கள் பலர் பிஜி(பேயிங் கெஸ்டில்) தங்குகின்றனர். பாதுகாப்பிற்காக பல பெண்கள் ஒரே இடத்தில் தங்குகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகர் முதல் தெருவில் ஒரு தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இதை சஞ்சீவி என்பவர் நடத்தி வந்தார். இந்த விடுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பல பெண்கள் தங்கியிருந்தனர்.
 
விடுதியில் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் நடந்து வந்தது. அவ்வப்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதைப் பார்த்து சந்தேகித்த பெண்கள், ரூமில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்குமோ என சந்தேகித்தனர். இதையடுத்து தங்கள் மொபைலில் ஹிட்டன் கேமரா டிடக்டர் செயலியை பதிவேற்றம் செய்து சோதனை செய்ததில் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சார்ஜ் போடும் பிளக்கில் கேமரா, குளியறையில் கேமரா என பல இடங்களில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து போலீஸார் இந்த கேடுகெட்ட செயலை செய்த சஞ்சீவியை கைது செய்தனர். அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் சென்னையில் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.