சென்னையில் விஜய் சேதுபதியின் சிலை ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Last Modified திங்கள், 3 டிசம்பர் 2018 (11:43 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25-வது படத்திற்காக திறக்கப்பட்ட மெழுகு சிலை .
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கைள தேர்ந்தெடுத்து நடிப்பவர். அந்த வகையில் தற்போது வயதான தோற்றத்தில் ‘சீதக்காதி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி  திரு.ஆதிமூலம் ஐயா என்ற நாடக கலைஞராக நடித்துள்ளார். 
 
சமீபத்தில் வயதான தோற்றத்தில் வெளிவந்த இப்படத்தின் ஃ.பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்படத்தின் சில புகைப்படங்களும் வெளியாவதன் மூலம் படத்தின் மீதான எதிர்பாரப்பு அதிகரிக்க செய்துள்ளது.
 
இந்நிலையில் " சீதக்காதி " படத்தின் கதாபாத்திரத்தை மெழுகு சிலையாக உருவாக்கப்பட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வைக்கப்பட்டுள்ளது.
 
இயக்குநர் மஹேந்திரன் இந்த சிலையை நேற்று மாலை 6மணிக்கு திறந்து வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.
 
‘சீதக்காதி’ படமானது வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், அப்படத்தினைத் தொடர்ந்து, ‘சூப்பர் டீலக்ஸ்’ படமும் தயாராகி வருகிறது.  
 
 


இதில் மேலும் படிக்கவும் :