வீதியில் இறங்கி உதவி செய்யும் ஆன்மீகவாதிகள்: டுவிட்டரில் மட்டுமே போராடும் நாத்திகவாதிகள்
வீதியில் இறங்கி உதவி செய்யும் ஆன்மீகவாதிகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருக்கும் நிலையில் பலரிடமிருந்து ஒளிந்திருந்த மனிதத் தன்மைகள் தற்போது வெளிப்பட்டு வருகின்றன. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்றும், கொரோனா வைரசுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போரிட வேண்டும் என்ற மனப்பான்மை பலரிடமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் உதவி செய்யும் மனப்பான்மையும் பலருக்கு தற்போதுதான் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆன்மீகவாதிகள் தங்களால் முடிந்த உதவியை செய்வதோடு உணவு சமைத்து வீதிவீதியாக கொண்டு மக்களுக்கு பரிமாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கூட சிதம்பரம் கோவிலை சேர்ந்த தீட்சதர்கள் உணவு தயார் செய்து ஒவ்வொரு வீதிக்கும் சென்று அங்கு உள்ள பொது மக்களுக்கு உணவு அளித்து உணவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளை எந்நேரமும் குற்றம் கூறி வரும் நாத்திகவாதிகள் இதுவரை ஒரு பைசா கூட பொதுமக்களுக்கு உதவி செய்யவில்லை என நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாநில மத்திய அரசை குறை சொல்லி பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை குறை சொல்லி தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவதில் மட்டுமே நாத்திகவாதிகள் ஈடுபட்டு வருவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்
பகுத்தறிவு பேசிய பலரின் பேச்சுகள் தற்போது எடுபடாமல் மத வேறுபாடின்றி அனைவரும் வேப்பிலை மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதை பார்க்கும்போது, இது பெரியார் பூமி அல்ல ஆன்மீக பூமி என்பதை உறுதி செய்து இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்