அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.
ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்தபடி அதிமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் இரண்டு அதிமுகவுக்கும், ஒன்று பாமகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுகவுக்கான இரண்டு இடங்களில் முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.