கன்னியாகுமரி கடல் பகுதியில் சூறைக்காற்று: சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம்!
கடந்த மாதம் 30-ஆம் தேதி குமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலில் இருந்து அந்த மாவட்டம் இன்னும் மீளவில்லை. மிகப்பெரிய இழப்பை அம்மாவட்டம் சந்தித்துள்ள நிலையில் தற்போது அங்கு சூறைக்காற்று வீசி வருகிறது.
கன்னியாகுமரியை பொறுத்தவரை சுற்றுலா மற்றும் மீன்பிடி மாவட்டம். ஓகி புயலுக்கு பின்னர் அங்கு மக்களுடைய இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்தது. மக்கள் எந்தவித தொழிலும் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிலர் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் கடலில் பலத்த காற்று வீசியதால் அவர்கள் மீண்டும் கரைக்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் அங்கு கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.