வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2025 (08:55 IST)

தொடரும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்டங்களில்..? - வானிலை ஆய்வு மையம்!

Rain

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி, வருகிற 25ம் தேதி ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிக்கு அப்பால் வங்க கடலில் வடமேற்கு திசையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

 

அதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். அதன்படி அடுத்த சில மணி நேரங்களில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K