1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (13:24 IST)

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
தென்கிழக்கு வங்ககடலில் இன்னும் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றும் என்றும் அது தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
குறிப்பாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் தென்மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் மார்ச் 2 மற்றும் மார்ச் 3-ஆம் தேதி முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது